குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய 425 வது ஜுபிலி ஆண்டு பங்கு குடும்ப விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் விழா நடக்கிறது.
மூன்றாம் நாளான நேற்று 2-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியான புனித காணிக்கை அன்னையின் சப்ரபவனியுடன் மெழுகுவர்த்தி பவனி நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து, புனித காணிக்கை அன்னையின் சப்பர மெழுகுவர்த்தி பவனி புறப்பட்டு சென்றது.
பவனிக்கு வழி நெடுக பொதுமக்கள் வரவேற்பளித்தனர். பவனியானது காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை ஆலயம் சென்றடைந்தது. அங்கு இரவு 10 மணிக்கு சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று திங்கள்கிழமை காலை திருப்பலி நடைபெற்றது.