தைப்பூசத்தையொட்டி நாளை (பிப்.11) பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. பொது விடுமுறை நாளான தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகளை மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால், நாளை காலை 10 மணி முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை கட்டணம் சேர்த்து வசூலிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.