சென்னை: சைதாப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தின் ஆக்ஸிலேட்டரை, அறியாமல் திருகிய 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 வயது சிறுமி நிஹாரிகாவின் தாத்தா பத்மநாபன், சிறுமியை ஸ்கூட்டரில் நிற்கவைத்துவிட்டு அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்போது, நிஹாரிகா ஆக்சிலேட்டரை திருகியதால், ஸ்கூட்டர் வேகமாக சென்று சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இவ்விபத்தில் படுகாயமடைந்த நிஹாரிகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்