கொல்லங்கோடு: கேரளாவிலிருந்து மீன் ஏற்றிவந்த வாகனம் சிக்கியது

85பார்த்தது
கேரளப் பகுதியிலிருந்து குமரி மாவட்டத்திற்கு கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்களை குமரி மாவட்ட எஸ்பியின்  உத்தரவின் பேரில், சோதனை சாவடி போலீசார் கடும் சோதனைக்கு பின் தமிழக பகுதியில் அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் இன்று (24-ம் தேதி) காலை சுமார் 7 மணியளவில் கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி கொல்லங்கோடு அருகே உள்ள காக்க விளை  சோதனை சாவடி வழியாக பிறீசர் கண்டெய்னர் லாரி வந்துள்ளது.
       அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, துர்நாற்றம் வீசி உள்ளது. இதை அடுத்து டிரைவருடன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஞானராஜ் நடத்திய விசாரணையில் கூடங்குளத்தில் உரம் தயாரிக்கும் கம்பெனிக்கு கொண்டு செல்வதாக தெரியவந்தது.
இதை அடுத்து கொல்லங்கோடு போலீசார் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எந்த வகையான நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி