தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி கடந்த பிப்.2ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) காலை 7.45 மணியளவில் நடைபெறுகிறது. நேற்று தலைவர் விஜய்யை, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.