கருங்கல்:  மின்கம்பத்தில் மோதிய லாரி ; பொதுமக்கள் மடக்கினர்

66பார்த்தது
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில்  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகன் (54) என்ற டிரைவர் கீழ்குளம் பகுதியில் ஜல்லி ஏற்றி கொண்டு வந்துள்ளார். ஜல்லி இறக்கிவிட்டு நாகர்கோவில்  நோக்கி புறப்பட்டார்.

       கருங்கல் அருகே உள்ள கருக்குபனை  பகுதியில் லாரி நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. லாரி டிரைவர் நிறுத்தாமல் வேகமாக ஒட்டி சென்றார்.

       இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஒரு ஆட்டோவில் லாரியை 8 கிலோமீட்டர் தூரம் தூரத்தி பிடித்து, கருங்கல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் மதுபோதையில் இருந்து தெரிய வந்தது. மேலும் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி