திருப்பதியில் உயிரிழந்த சிறுவன்.. தேவஸ்தானம் விளக்கம்

50பார்த்தது
திருப்பதியில் உயிரிழந்த சிறுவன்.. தேவஸ்தானம் விளக்கம்
கர்நாடகாவைச் சேர்ந்த சிறுவன், கடந்த 22ஆம் தேதி இரவு திருமலை அன்னதான சத்திரத்தில் சாப்பிட்டு முடித்து வெளியே சென்றார். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படும் சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், “நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு, 6 ஆண்டுகளுக்கு முன் இதய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. கூட்ட நெரிசல் காரணமாக சிறுவன் இறக்கவில்லை” என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி