ஆறுகாணி:  ரப்பர் பதப்படுத்தும் குடோன் தீ பிடித்து எரிந்தது

56பார்த்தது
குமரிமலையோர கிராமமான ஆறுகாணி பகுதியில் ஷீன் டோமி என்பவரது என்பவர் வீட்டின் பின்புற பகுதியில் ரப்பர் ஷீட்டை பதப்படுத்தி உபயோகப்படுத்தும் குடோன் ஒன்று வைத்திருந்தார். இதில் ஏராள ரப்பர் சீட்டுகள் காணப்பட்டன.

         இந்த நிலையில் இன்று 20-ம் தேதி மதியம் திடீரென அந்த குடோனில் தீப்பிடித்து எரிந்தது. காற்றின்  வேகம் அதிகமாக இருந்ததால் தீ அருகில் உள்ள மரங்களில் பரவி மரங்கள் கருகியது. மேலும் கட்டிடம் விரிசல் அடைந்தது.  

      உடனடியாக அப்பகுதியினர் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி  ரப்பர் குடோனில் பிடித்த தீயை அணைத்தனர். இதில் ஏராளம் ரப்பர் சீட்டுகள் எரிந்து  சேதம் அடைந்து. பல லட்ச ரூபாய் இழப்பு வந்ததாக தெரிய வருகிறது. ஆறு காணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி