கொல்லங்கோடு: மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது

82பார்த்தது
கொல்லங்கோடு: மருந்து கடைகளில் திருடிய வாலிபர் கைது
கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் மற்றும் கண்ணனாகம் ஆகிய சந்திப்பு பகுதிகளில் ஆங்கில மருந்து கடைகள் தனித்தனியாக உள்ளன. இதை ஐரின் சந்திரன், மோகன் நாயர் ஆகிய 2 பேர் நடத்தி வருகின்றனர். இந்த கடைகளின் பூட்டுகளை உடைத்து மொத்தம் ரூ. 6,500 கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இது குறித்து ஐரின் சந்திரன், மோகன் நாயர் ஆகியோர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில் இரண்டு திருட்டு சம்பவங்களிலும் தொடர்புடையவர் பொழியூர் பகுதியை சேர்ந்த அகின் (26) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து நேற்று நீரோடியில் வைத்து கொல்லங்கோடு போலீசார் அகினை கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி