கருங்கல்: கோவில் உண்டியலை பெயர்த்து சென்ற திருடன்

58பார்த்தது
கருங்கல் அருகே பால விளையில் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன், இசக்கியம்மன் மற்றும் சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. நேற்று காலை கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. 

ஏற்கனவே பலமுறை இந்த கோயிலில் திருட்டு நடந்ததால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் பதிவான காட்சிகளை பார்த்த போது, நேற்று அதிகாலை 4 மணிக்கு கையில் ஆயுதத்துடன் முகமூடி அணிந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் கோயில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து அவர் இசக்கி அம்மன் கோவில் சன்னதியில் உள்ள உண்டியலை உடைக்க முடியவில்லை. இதையடுத்து பத்ரேஸ்வரி கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. 

அந்த உண்டியில் சுமார் 5 ஆயிரம் ரூபாய் இருந்திருக்கலாம் என்று தெரிவித்தனர். சம்பவம் குறித்து கோயில் தலைவர் பிரேம் சிங் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கோயிலில் நகைகள் கோவில் வளாகத்தில் பாதுகாப்பான முறையில் லாக்கர் வசதி செய்து பாதுகாப்பு வைத்துள்ளனர். இதனால் சுமார் 50 லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி