கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி

82பார்த்தது
கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி
கரூர் - திருச்சி சாலையில் இன்று (பிப்.,26) அதிகாலை நடந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சடலங்களை மீட்ட போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி