தாம்பரம் - Tambaram

தட்டு ஏந்தியபடி காஞ்சியில் நெசவாளர்கள் போராட்டம்

தட்டு ஏந்தியபடி காஞ்சியில் நெசவாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில், பருத்தி, பட்டு நெசவுக்கான கூலி இதுவரையில், சங்க அலுவலகத்தில் ரொக்கமாக கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், நெசவாளர்களுக்கு நெசவு கூலியை வங்கியில் வரவு வைக்க கைத்தறி துறை அறிவுறுத்தியுள்ளது.  இது சம்பந்தமாக, கைத்தறி துறை துணை இயக்குநர் மணிமுத்து, அனைத்து சங்கங்களுக்கும், நெசவு கூலி பற்றிய அறிவிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார். இந்த உத்தரவு நெசவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. நெசவு கூலியை வங்கியில் செலுத்த, நெசவாளர்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தும் என நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தங்களது நெசவு கூலியை, ரொக்கமாக கையில் கொடுக்க வேண்டும் என, நெசவாளர்கள் மட்டுமல்லாமல், கைத்தறி சங்க நிர்வாகிகளும் வலியுறுத்துகின்றனர்.  இது சம்பந்தமாக, கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ரொக்கமாக கூலி வழங்குவதை உறுதி செய்ய, பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கங்களின் முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், நெசவாளர்கள் என, ஏராளமானோர் நேற்று போராட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் காலனியில் உள்ள கைத்தறி துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக, நெசவாளர்கள் நாமமிட்டு, கைகளில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా