கல்பாக்கத்தில் திரிக்கைமீன் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி

57பார்த்தது
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களின் வலையில் 1.5 டன் எடையுள்ள ராட்சத அளவிலான கோட்டான் வகையை சேர்ந்த திரிக்கை மீன் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்த செந்தில் தலைமையில், பாண்டியன், தங்கமணி, குமார் ஆகிய மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக படகில் கடலுக்கு சென்றனர். மேலும், கடலில் மீன் பிடிப்பதற்காக வலை வீசினர். அப்போது, மீனவர்களின் வலையில் சுமார் 1,500 கிலோ எடைகொண்ட ராட்சத அளவிலான கோட்டான் வகையை சேர்ந்த திரிக்கை மீன் ஒன்று வலையில் சிக்கியது. இதையடுத்து, திரிக்கை மீனை பத்திரமாக வலையுடன் கரைக்கு இழுத்து வந்தனர். 

மேலும், திரிக்கை அளவில் பெரியதும் மற்றும் வேகமாக நீந்தக்கூடியதும் என்பதால், வலையை அறுத்துக்கொண்டு தப்பி சென்றுவிடும் என்பதால், வலையுடன் கரைக்கு இழுத்து வந்ததாகவும் சுமார் ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனையாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். பிடிபட்ட மீனை மீன் வியாபாரியிடம் விற்கப்பட்டது. இந்த மீனை கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

தொடர்புடைய செய்தி