அத்தியூர் சாலை சீரமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு

83பார்த்தது
அத்தியூர் சாலை சீரமைக்கப்படுமா என எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம்உத்திரமேரூர் ஒன்றியம், அத்தியூர் மேல்தூளி ஊராட்சியில் ஆதிநாராயணபுரம், அத்தியூர், மேல்தூளி, சோழனூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், அத்தியூர் கிராமத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக, 25 ஆண்டுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. 

இந்த சாலையை பயன்படுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், காவனூர் புதுச்சேரி, உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.தற்போது, இந்த சாலை முறையாக பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. இதன் வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர், மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும், மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கும் மழைநீரில் சிக்கி விழுவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி