தாம்பரம் - Tambaram

திருப்போரூர் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

திருப்போரூர் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், இரண்டு ஜோடிகளுக்கு, நேற்று (அக்.,23) இலவச திருமணம் நடந்தது. இதில், செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். செயல் அலுவலர் குமரவேல் முன்னிலை வகித்தார். திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினர். மணமக்களுக்கு பட்டு வேட்டி, சட்டை, பட்டு புடவை, 4 கிராம் தங்கம், கட்டில், மெத்தை, பீரோ, குத்து விளக்கு மற்றும் சீர்வரிசை பாத்திரங்கள் உள்ளிட்ட, 60, 000 ரூபாய் மதிப்பில், 26 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా