ராயல் என்ஃபீல்டு மற்றும் ஹோண்டாவின் CB - 350 சீரிஸ் பைக்குகளுக்கு போட்டியாக, 300 முதல் 500 சிசி திறனுடைய புதிய பைக்கை வெளியிட டிவிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பைக்கை நேரடியாக டிவிஎஸ் பிராண்டின் கீழ் வெளியிடாமல், தற்போது அதன் துணை நிறுவனமாக இருக்கும் நார்டன் பிராண்டின் கீழ் வெளியிட அந்நிறுவனம் திட்டம். இந்த பிராண்டின் கீழ் 3 மாடல்கள் வெளிவர உள்ளது.