கேரவனில் உடைமாற்றும்போது நடந்த கசப்பான அனுபவத்தை நடிகை ஷாலினி பாண்டே பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த அவர், "நான் 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். அப்போது அந்த படத்தின் இயக்குநர் நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார். என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன்" என்று கூறியுள்ளார்.