மாமல்லபுரம் கடற்கரையில் மாசி மாத பௌர்ணமி தின விழா

73பார்த்தது
மாசி மாதத்தில் வரும் மாசிமகத்தை தொடர்ந்து பௌர்ணமி தினமான இன்று ஆயிரக்கணக்கான பழங்குடி இருளர் இன மக்கள் ஆண்டுதோறும் மாமல்லபுரம் கடற்கரைக்கு வருவது உண்டு. அங்கு தங்கள் குலதெய்வமான கன்னியம்மன் மாசிமக பௌர்ணமி அன்று கடற்கரையில் அருள்பாலிப்பதாக நம்புகின்றனர். அப்போது, அவர்கள் அங்கு அமைந்துள்ள தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வணங்கி தங்கள் உறவுமுறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சடங்குகளை செய்வது வழக்கம். 

இதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் மாசிமகத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடுகின்றனர். குடில்கள் அமைத்து அங்கு தங்கி சமைத்தும் சாப்பிடுகின்றனர். இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி மகிழ்கின்றனர். மறுநாள் காலையில் கடற்கரையில் தங்கள் குலதெய்வமான கன்னியம்மனுக்கு மணலில் 5, 7 படி அமைத்து தேங்காய், பூ, பழம் வைத்து வழிபாடு செய்து, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மேலும் இன்றைய தினம் நிச்சயம் செய்த ஜோடிகளுக்கு எளிமையான முறையில் திருமணம் செய்கின்றனர். அப்போது மணமகன் வேட்டி-சட்டை அணிந்தும், மணமகள் கூரைப்புடவை அணிந்தும் காணப்படுகின்றனர். இதையடுத்து, நிகழ்ச்சியின் போது, தங்கள் பாரம்பரிய பாடல்களை பாடியும் மணமக்களை மகிழ்விக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி