மத்தியப்பிரதேசத்தில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ள 19 நகரங்களில் மது விற்பனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் உள்ளிட்ட 19 நகரங்களில் மது விற்பனைக்கு ஏப்.1 முதல் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நகரங்கள் அனைத்தும் புனிதமானவை, அவை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த முடிவு எடுக்க காரணம் என CM மோகன் யாதவ் கூறியுள்ளார்.