புக்கத்துறை அருகே முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தொடக்க விழா காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை முதல் உத்திரமேரூர் வரை தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 22. 75 லட்சம் மதிப்பில் இரண்டு வழிச்சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல் பணி தொடக்க விழா நிகழ்ச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு சாலை விரிவாக்கம் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய்,
உதவி கோட்ட பொறியாளர் அனந்தகல்யாணராமன், உதவி பொறியாளர் ஜரேஸ் கோல்ட், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.