செங்கல்பட்டில் ஊழியர் மீது கார் மோதும் சிசிடிவி காட்சி

71பார்த்தது
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் SRK சினிமா தியேட்டர் இயங்கி வருகிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சேவியர் ( 30). என்பவர் தியேட்டரின் உள்ளே வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பார்க்கிங் செய்வதை கவனிக்கும் வேலை செய்து வருகிறார். இன்று மதியம் இந்நிலையில் தியேட்டரின் உள்ளே படம் பார்க்க வந்த தீபக் (21) என்னும் நபர் தனது காரில் தியேட்டரின் நுழைவுவாயிலில் வரும் போது மேடான பகுதியில் காரை நிறுத்துவதற்காக வந்துள்ளார்.

அப்போது கார் மேலே ஏற முடியாமல் மீண்டும் மீண்டும் கீழே இறங்கியது. தொடர்ந்து காரின் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தியதால் சீறி பாய்ந்த கார் எதிர்பாராத விதமாக முன்னாள் நின்று கொண்டிருந்த சேவியரின் மீது பலமாக மோதியது. இதில் அலறி துடித்து பலத்த காயமடைந்த சேவியரை மீட்ட தீபக் அவரது காரிலேயே அழைத்து கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தொடர்ந்து சேவியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சேவியரின் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி