மறைமலைநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர தீ விபத்து ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அனைத்தனர்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை பகுதியில் திருச்சி - சென்னை தேசய நெடுஞ்சாலை அருகே செடி, கொடிகள் குப்பைகள் எரிந்து வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் மறைமலைநகர் தீயனைப்புதுறை அலுவலகத்திற்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த 5 பேர் குழு கொண்ட தீயனைப்புதுறையினர் மற்றும் மறைமலைநகர் போலீசார் கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைக்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போடி தீயை முழுவதுமாக அனைத்தனர். மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனரா அல்லது வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மறைமலைநகர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சாலையில் புகை மூட்டத்துடன் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.