தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது.
நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
தவெக தலைவர் விஜய், சுற்றுப்பயணம், மாநாடு போன்றவற்றை திட்டமிட்டிருக்கும் நிலையில், கமாண்டோக்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கவுள்ளனர்.
இன்று காலை நீலாங்கரை காவல் நிலையம் வந்த மத்திய பாதுகாப்பு படையினர் புல் விவகாரங்கள் குறித்து காவல் துறையிடம் ஆலோசனை செய்து தற்பொழுது விஜய் வீட்டிற்கு வந்துள்ளனர் இவர்கள் இங்கேயே தங்கி இருந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர்.