செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நத்தம் கரியச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1975 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது தற்போது 2025 ஆம் ஆண்டுடன் நூறு ஆண்டுகள் ஆனதால் நூற்றாண்டு விழா நடத்த பள்ளி நிர்வாகமும் முன்னாள் மாணவர்களும் முடிவு செய்தனர் அதன் அடிப்படையில் நூற்றாண்டு விழா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளர்களாக திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவரும் நத்தம் கரியச்சேரி ஊராட்சி மன்ற தலைவருமான சேகர் மற்றும் ஒருங்கிணைந்த தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் பேசிய ஊராட்சி மன்ற தலைவர் உங்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையப் போகும் பள்ளி இதுவே என்றும் நன்கு கல்வி கற்க வேண்டும் கல்வியால் மட்டும் தான் அனைத்தையும் சாதிக்க முடியும் நன்கு படித்து வாழ்வில் உயருங்கள் உங்களுக்கு எந்த தேவை என்றாலும் செய்து கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார் தொடர்ந்து அப்பள்ளியில் 26 ஆண்டுகளாக பணியாற்றும் ஆசிரியை சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் பேசியவர் எனக்கு ஆசிரிய பதவி உயர்வு கிடைத்தது என தெரிவித்தார்.