செங்கல்பட்டில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் இதற்காக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருக்கழுக்குன்றத்திற்கு இன்று வருகை தந்த தமிழக முதல்வருக்கு வழிநெடிகிலும்.
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது முன்னதாக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம் எல் ஏ வுமான வீ தமிழ்மணி தலைமையில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கே கே பூபதி முன்னிலையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கொத்திமங்கலத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் வரை சாலை மார்க்கமாக 2 கீ. மி. தூரம் நடைபயணமாக (ரோட்சோ) சென்றவாறு சாலையின் இருபுறமும் இருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றவாறு பொதுமக்கள் உடன் செல்பி எடுத்து கை கொடுத்தும் சென்றார் நிகழ்ச்சியில் திருப்போரூர் சேர்மேன் எஸ் ஆர் எல் இதயவர்மன் திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.