பஞ்சாப் அணிக்கு 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது லக்னோ அணி. லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் பௌலிங்கை தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்கியது முதல் லக்னோ அணி பேட்டர்கள் பஞ்சாப்பின் பௌலிங்கை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்தது. பூரன் 44, பதோனி 41 மற்றும் மார்க்ரம் 28 ரன்கள் குவித்தனர்.