கடலை மாவில் உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். இதில் சுத்தம் செய்த ஓமவல்லி இலைகளை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் மாவில் தோய்த்த ஓமவல்லி இலைகளை பொரித்து எடுக்கவும். சுவை மற்றும் ஆரோக்கியமிக்க பஜ்ஜி தயார். மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். ஓமவல்லி இலைகள் நெஞ்சில் தேங்கியிருக்கும் சளி, நுரையீரல் தொற்றுகளுக்கு சிறந்த தீர்வு தருகிறது.