செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் ஹெமடைட் போன்ற உலர்ந்த இரும்பு ஆக்சைடுகளில் இருந்து சிவப்பு நிறம் வந்ததாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஃபெரிஹைட்ரெட் எனப்படும் தண்ணீரைக் கொண்ட இரும்பு ஆக்சைடுகள்தான் செவ்வாய் கிரகம் சிவப்பு நிறமாக இருப்பதற்கான காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன் என்கிற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி முன்பை விட செவ்வாய் கிரகம் அதிகம் துருப்பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.