வெடால், நாங்களத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா காஞ்சி தெற்கு மாவட்ட செயல க. சுந்தர் எம்எல்ஏ, செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெடால், நாங்களத்தூர் ஆகிய பகுதிகளில் ஒன்றிய கழக செயலாளர் சிற்றரசு, வெடால் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக அமைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்த தமிழக அரசுக்கும் தமிழ்நாடு அமைச்சருக்கும் அப்பகுதி விவசாயிகள் நன்றியும் பாராட்டையும் தெரிவித்தனர்.