தாம்பரம் - Tambaram

வீராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வீராபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில், நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில், சிறப்பு விருந்தினராக செய்யூர் எம். எல். ஏ. பனையூர் பாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் பேசியவர் இந்த பள்ளிக்கு என்ன வேண்டுமோ அதை செய்ய தயாராக உள்ளதாகவும் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்குண்டான அனைத்து பணிகளையும் மேற்கொள்வேன் என்றார். தொடர்ந்து பள்ளியில் பல்வேறு கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினரோடு பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்த எம்எல்ஏ, அங்கு அமைக்கப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜர் சிலையை திறந்து வைத்ததையடுத்து, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். மேலும், வயது முதிர்ந்த ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். வயது முதிர்ந்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் 102. வயதுடைய கிருஷ்ணமூர்த்தியை நாற்காலியில் அமரவைத்து முன்னாள் மாணவர்கள் தூக்கி வந்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా