செங்கல்பட்டில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் பங்கேற்றனர்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

செங்கல்பட்டு மாவட்ட செஸ் அசோசியசன் சார்பில் மாவட்ட அளவிலான மாபெரும் செஸ் போட்டி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், உள்ளிட்ட 8 தாலுக்காவிலும் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆண், பெண் இருபாலருக்கும், 7வயது, 9 வயது, 12வயது, 15 வயதிற்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக கோப்பைகளும், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டது.

அதேபோல் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்த மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டி அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி