மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள கோந்தாலி நகரை சேர்ந்தவர் அன்ஷுல் என்ற கவுரவ் பாபராவ் ஜெய்ப்பூர்கர் (19). இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு அன்ஷுலின் தந்தை பாபராவ் மதுகர் ஜெய்ப்பூர்கருக்கும் (52) அவரது தாய்க்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது மதுகர் தனது மனைவியை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்ஷுல் ஒரு மரக்கட்டையை எடுத்து தனது தந்தையின் தலையில் அடித்துள்ளார். இதில் அன்ஷுலின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் அன்ஷுலை கைது செய்துள்ளனர்.