மதுராந்தகத்தில் சிந்தனை நாள் விழா மற்றும் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் பேரணி 800 மாணவ மாணவிகள் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சாரண சாரணிய இயக்கத்தின் நிறுவனர் லார்ட் பேடன் பவல் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி சிந்தனை நாள் விழா சுற்றுப்புற சூழ்நிலை, இயற்கை பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்கார விழிப்புணர்வு குறித்துசாரண சாரணியர் பேரணி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் வளாகத்தில் மதுராந்தகம் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர் அங்கயர் கன்னி, மதுராந்தகம் நகராட்சி ஆணையர் அபர்ணா மற்றும் மதுராந்தகம் நகர் மன்ற தலைவர் மலர் விழிக்குமார் ஆகியோர்களால் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இப்பேரணி ஏரி காத்த ராமர் கோயிலில் வளாகத்தில் தொடங்கி தேரடி சாலை மற்றும் மருத்துவமனைச் சாலை வழியாக மீண்டும் ராமர் கோவிலை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் 50 பள்ளிகளை சேர்ந்த சாரண சாரணியர் ஆசிரியர்களும் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கையில் பதாகைகளுடன் விழிப்புணர்வு குறித்துபேரணியில் ஈடுபட்டனர்.