செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் சூப்ரைசராக வேலை பார்ப்பவர் கருப்பசாமி (வயது. 48) அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அடுக்கு மாடியின் லிப்டில் பயணிக்கும் சிறுமிகளிடம் இவர் அங்கிள் என பழகும் குழந்தைகளுக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குழந்தைகளிடமும் பார்க், வணிக வளாகம் போன்ற பகுதிகளில் விளையாடும் சிறுமிகளுக்கு சில்மிஷம் செய்து வந்ததால், பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோர்களிடம் கூறியதை அடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் அவரை கடந்த மாதம் தாக்கியதாக கூறப்படுகிறது தாக்குதலுக்கு உள்ளான கருப்பசாமி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் 3 பேர் சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர் சொந்த ஊரான ஆண்டிப்பட்டியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர் பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர், பாதிக்கப்பட்ட குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக மகளிர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் கருப்பசாமி சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. மகளிர் போலீசார் கருப்பசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.