அச்சிறுப்பாக்கம் அருகே சாலையை சீரமைத்து தர கோரிக்கை

77பார்த்தது
அச்சிறுப்பாக்கம் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சி இ.பி. காலனி முதல் அத்திவாக்கம் கிராமம் வரை கடந்த எட்டு ஆண்டுகளாக குண்டும் குழியுமாய் உள்ள சாலை சீரமைத்து தர மக்களுடன் முதல்வர் முகாமில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிராம பொதுமக்கள் மனுக்கள் வழங்கியும் இந்நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வர முடியாத சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ஆகவே இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி