திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் எம். தினேஷ்குமார் மீது நேற்று முன்தினம் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். மேலும் திருக்கழுக்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் முன்னிலையில் நடைபெறும் என அறிவித்தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த 200 க்கும் மேற்ப்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதுபோல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்தி மங்கலம் பைபாஸ் சாலை சந்திப்பில் போலீசார் அவரை செல்லவிடாமல் மறித்தனர் பெரும் வாக்குவாதத்திற்கு பிறகு ஜெயகுமார் மற்றும் முன்னாள் எம். எல். ஏ - தனபால், ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ராகவன் ஆகியோர் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடன் வந்த ஒன்றிய செயலாளர் குமரவேல் உள்பட 20 க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் கைது செய்து பேருந்தில் அழைத்து சென்று மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட கழக செயலாளர் அலுவலகத்திற்கு சென்ற ஜெயக்குமார் அங்கு திரண்டிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திமுக அரசை கண்டித்தும் - போலீஸ் அராஜகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.