செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிற்கு உட்பட்ட லட்டூர் பஞ்சாயத்தில் மேற்கண்டை கிராமத்தில் வசிக்கும் விவசாயி வேலாயுதம் என்பவர் தனது நிலத்தின் பம்ப் செட் மீது செல்லும் மின் வயரை மாற்ற வேண்டி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த ஒரு விதமான நடவடிக்கையும் எடுக்காததால் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நலன் காக்கும் கூட்டத்தில் அரை நிர்வாணத்துடன் வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாய செய்தியாளர்களும் தெரிவிக்கையில் நான் மிகவும் ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். தனது நிலத்தின் பம்ப் செட் மீது நான் இல்லாத நாளன்று மின்வாரிய அதிகாரிகள் கம்பம் நட்டு மின்சார லைன் எடுத்துச் சென்றனர். அவர்களிடம் கேட்டபோது நீ இருந்து தடுக்க வேண்டியது தானே என்று கூறுகின்றனர். அப்படி செல்லும் வயரை மாற்ற வேண்டி பலமுறை அதிகாரிகள் முறையிட்டும் தான் பணம் கட்ட முடியாமல் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் பதில் அளித்து வருகின்றனர்.
இதனால் இன்று விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் எனக்கு பணம் வசதி இல்லாததால் என்னுடைய மனைவியின் தாலியை வைத்து பனங்கட்டி போடப்பட்ட மின்வாரிய கம்பம் வயரை மாற்றி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.