செங்கல்பட்டு: பைக் விபத்தில் நகராட்சி காவலாளி பலி

70பார்த்தது
செங்கல்பட்டு: பைக் விபத்தில் நகராட்சி காவலாளி பலி
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தீனதயாளன், 56. செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் இரவு காவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8ம் தேதி காலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடைக்கு டூவீலரில் சென்றார். 

மீண்டும் நகராட்சி அலுவலகத்திற்குச் செல்ல டூவீலரை எடுத்துத் திரும்பும்போது ராட்டினம் கிணறு பகுதியில் இருந்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்த ராயல் என்ஃபீல்டு பைக் தீனதயாளன் மீது மோதி விட்டுச் சென்றது. அங்கிருந்தோர் அவரை மீட்டு சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தீனதயாளன் நேற்று (பிப்ரவரி 18) அதிகாலை உயிரிழந்தார். செங்கல்பட்டு நகரப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி