செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மணப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ. அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கினர்.