

ரமலான் தொகுப்பு வழங்கிய திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர்
திருக்கழுக்குன்றத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு இறைச்சியுடன் ரமலான் தொகுப்பினை வழங்கிய பேரூராட்சி தலைவர் யுவராஜ். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட மசூதி தெருவில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இஸ்லாமியர்களுக்கு புனித பண்டிகையாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாட உள்ளது. ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டுமென பேரூராட்சித் தலைவர் யுவராஜ் முடிவு செய்து அதற்கு தேவையான இறைச்சி மற்றும் அரிசி தேவையான மளிகை பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பினை 600 இஸ்லாமிய குடும்பங்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் தவுலத் பீவி, திமுக நிர்வாகிகள் அஹமது சரவணன் இளங்கோ செங்குட்டுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.