தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக அரசுக்கு மத்திய அரசு 2500 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் கடலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் "மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டால் என்ன, தமிழ் மொழியை காக்க நான் நிதி கொடுக்கின்றேன் என கூறி தன்னுடைய பங்காக பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். என்னுடைய தாத்தா, பாட்டி இருவரும் தமிழாசிரியர் என்பதால் தமிழைக் காக்க என்னுடைய நிதியாக இதை வைத்துக் கொள்ளுங்கள் என கடலூரை சேர்ந்த 4 வயது எல்கேஜி மாணவி நன்முகை கோவன் கூறியுள்ளார்.