யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியில் கொண்டாடப்படுகிறது. அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதியாகும். பூரண பிரதமை திதி தினமே யுகாதி திருநாள் என்று சொல்லப்படுகிறது. மனித வாழ்க்கையில் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மாறி மாறி வரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.