"பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா" உலகின் மிகப்பெரிய பயிர் காப்பீட்டு திட்டம் என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் நன்மைகள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர், இந்த திட்டம் இன்று உலகின் மிகப்பெரிய பயிர் காப்பீட்டு திட்டமாக மாறியுள்ளது. இது மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு பாதுகாப்பையும் பலன்களையும் வழங்குகிறது என்றார்.