உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சந்தியா என்ற பெண், 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார். அன்றைய தினம் முதல் அப்பெண்ணிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில், வயிற்றில் கத்தரிக்கோல்க இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதனை மருத்துவர்கள் அகற்றினர். மேலும், 17 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து தைத்தது தெரியவந்தது.