செங்கல்பட்டு மாவட்டம், சென்னையை அடுத்த படூர் ஊராட்சியில் பாரம்பரிய உணவுகளையும் மறந்து வரும் நிலையில் அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தேவையான சத்துக்களையும் தரும் இயற்கை வேளாண் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தானியங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளடக்கிய வார சந்தையை துவங்க வேண்டும் என படூர் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தாரா சுதாகர் மற்றும் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை நிறுவனர் சுதாகர் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு அதற்கான சந்தைப்படுத்துதல் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமையில் நடைபெற்றது, இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயற்கை முறையில் விலையவைத்த ஆர்கானிக் காய்கறி வகைகள், கீரை வகைகள் மற்றும் பாரம்பரிய சிறுதானியங்கள், அரிசி வகைகள், மளிகை பொருட்கள், கைவினைப் பொருட்கள், மகளிர் சுய உதவி குழுக்களின் பாரம்பரிய உணவு வகைகள், இயற்கை மருந்துகள், வாசனை திரவியங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆர்வமுடன் வந்து வேண்டிய பொருட்களை வாங்கிச் சென்றனர், மேலும் பாரம்பரிய உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர் வாரம்தோறும் இந்த சந்தை அமைத்திட வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்ககள் கோரிக்கை வைத்தனர்.