ஷாவ்மி காரைப் புகழ்ந்த ஃபோர்டு சி.இ.ஓ
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷாவ்மி எஸ்.யூ.7 பேட்டரி காரின் தொழில்நுட்பத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார் அமெரிக்காவின் போர்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபேர்லி. கடந்த 6 மாதங்களாக ஷாவ்மி எஸ்.யூ.7 காரைத் தான் பயன்படுத்துவதாகவும், சமீபகாலமாக அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் சீன நிறுவன கார்கள் தயாரிக்கப்படுவதாகவும் ஜிம் ஃபேர்லி தெரிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை 25 லட்சமாகும்.