1856-ல் கிரேக்க நாட்டில் பிறந்தவர் மிஹைலோ டோலோடோஸ். இவர் பிறந்த 4 மணி நேரத்தில் அவரது தாயார் இறந்தார். அந்த குழந்தையை யாரும் உரிமை கோரி வராததால் கிரேக்க நாட்டின் மலைப்பகுதியில் இருந்த அதோஸ் மடாலயத்தில் குழந்தை விடப்பட்டது. இந்த மடத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற விதி கடுமையாக பின்பற்றப்பட்டது. மலை மீது அமைந்த மடத்தின் சுவர்களுக்குப் பின்னால் இருந்த உலகையும், பெண்களையும் பற்றி அறியாமலேயே மிஹைலோ காலமானார்.