தவெக மாநாட்டிற்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

67பார்த்தது
தவெக மாநாட்டிற்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
சென்னையில் இருந்து தவெக மாநாட்டுக்குச் சென்ற வேன் சேலையூர் சந்தோசபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை முந்தி செல்ல முயன்றபோது ஏற்பட்ட இந்த விபத்தில், 11 பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று (அக்.27) விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள ஏராளமான தொண்டர்கள் படையெடுத்துச் செல்ல தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி