திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற புகழைக் கொண்டது திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில். கி.பி.1052இல் வீரராசேந்திர சோழரால் நிர்மாணிக்கப்பட்டு முதல் வைணவத் திருக்கோயில் இது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து கல்யாண தீர்த்தங்களில் நீராடி, ஆதிவராகர்-அகிலவல்லி நாச்சியாரை சேவித்து மாலையணிந்து, 9 முறை வலம்வந்து வீடு திரும்பினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.