ஷாப்பிங் மாலில் தீ விபத்து.. ரூ.7 கோடி பொருள் நாசம்

57பார்த்தது
தெலங்கானா ஜனகாமா மாவட்டத்தில் உள்ள பிரபல விஜயா ஷாப்பிங் மாலில் இன்று (அக்.27) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென எரிந்த நிலையில் அருகில் உள்ள வணிக வளாகங்களுக்கும் பரவியது. அடுத்தடுத்து எரிந்த மூன்று வணிக வளாகங்களும், சில வணிக வளாகங்களும் தீப்பிடிக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில், ரூ.7 கோடி பொருள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி